×

அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று வரும் பிரதமர் மோடி, 2 கி.மீ ரோடு ஷோ மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, இன்று உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு செல்கிறார்.

அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு நடத்திய பின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி அயோத்தியில் 2 கி.மீ நடைபெறும் ரோடு ஷோவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இட்டாவா மற்றும் தவுராஹாரா ஆகிய இடங்களில் நடக்கும் பிரசாரக் கூட்டங்களில் மோடி உரையாற்றுகிறார்.

The post அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Ayodhya Ayodhya ,Modi ,Ayodhi Ramar Temple ,Me Road Show ,Brahmanta Public Meeting ,Ayodhya ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...